E - Everyone

போட்னோ

PreviousNext

" $^$^%#& ^#%%#& ( %^$^%#$#^$&N*% )*&$@^&&#%@&&Z. >:?>[][ @#$% $%^&* @#$%^&*( #$%^&* #$%^&* #$%^&* $%^&*( **^*%&^ &%*% ^*^ #@%$% )(* &^$%&^$% (&@#$%&& ## (*&(*^&&% &%$&^%$^&^& *^%@$^**((^^%%#@%&)_++()^$%^*)@@#~#%$^% &^%&^%*&^ *(&(&)*& ) (*_()_)^%$$#%$# &^%& %#%$#*@%$&( %$&(*&(*&( ()&*&^^ ^%$^#$%@ (^&%^& &%$^$# …. 

(இக்கதை நமக்காக தமிழில்....)
“புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்தில் உயிரினம் வாழக்கூடிய சாத்தியம் இருப்பதாக சாக் விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் தெரிவித்துள்ளது. மாற்று கிரகம் கண்டுப்பிடித்த விஞ்ஞானிகளை உலக தலைவர் க்ளிங் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஆராய்ச்சிக்கான செலவுகளை அரசே ஏற்க்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்தைப் பற்றி சாக் விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தை தொடர்புக் கொண்டதில்...
"அப்பா, அப்பா... என்னப்பா சொல்றாங்க?"
"க்ளூ, எத்தன தடவ சொல்லிருக்கன், செய்தி பாக்கும்போது தொந்தரவு பண்ணாத"
----------------------------------------------------------------------------------------------------------------------------------
“"இப்ப சொல்லுப்பா"
"புதுசா ஒரு கிரகம் கண்டுபிடிச்சிருக்காங்கடா, நம்ம கிரகம் மாதிரியே அங்கயும் உயிரினம்இருக்காம்."
"நம்மல மாதிரியேவா?"
"நம்மல மாதிரினு சொல்ல முடியாது, அவங்களுக்கு ரெண்டு கண்ணு கூட இருக்கலாம், விரல் இல்லாம, கை கூட இல்லாம எப்பிடி வேணும்னாலும் இருப்பாங்க, இனிமே தான்கண்டுபிடிக்கணும்" 

"ரெண்டு கண்ணா? அப்பா, அப்பா, அவங்கள பாத்தா பயமா இருக்குமா?"
"தெரியலடா, அது நம்ம உலகம் மாதிரி இல்ல, நிறைய உயிரினம் இருக்காம், அதனால தெளிவாதெரியல"
"நிறைய உயிரனம்னா?"
"நிறைய உயிரனம்னா, ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரிடா"
"அவங்க எல்லாம் இங்க வருவாங்களா? அப்பா பயமா இருக்குப்பா..."
"க்ளூ, பயப்படாதடா, அவங்க இங்க வரமாட்டாங்க, அந்த கிரகத்த ஆராய்ச்சிப் பண்ண நம்ம உலகத்துல இருந்து செயற்க்கை உயிரனங்கல அனுப்ப போறாங்க."
"எதுக்குப்பா?"
"சொன்னா நீ பயப்படுவ, வேணாம்"
"அப்பா, சொல்லுப்பா"
"அப்பா, சொல்லுப்பா, நான் பயப்படமாட்டன்"
"அப்பா..."
"க்ளூ, தூங்கு"
"ச்ச்... சரி..."
---------------------------------------------------------------------------------------------------------------------------------
சாக் ஆராய்ச்சிக்கூடம்,
"ச்ளா, அளவு ரொம்ப முக்கியம், அரசாங்க பணத்த வீணாக்ககூடாது"
"தெரியும், தெரியும்"
"ச்ளா, சொல்லிக்கிட்டே இருக்கன், நீ அளவுக்கு அதிகமா வைக்கிறடா"
"தெரியும், தெரியும்..."
"என்ன தெரியும் தெரியும்? நான் ப்ளோன் கூடவே வேலை செய்றன் போ"
"ஏ, சூட், சூட், என்ன பிரச்சன உனக்கு?, அளவு சரியாதான் இருக்கு, நீ அவன் கூட வேலை செய்யறது எனக்கு பிடிகாதுனு உனக்கு தெரியுமில்ல?"
"என்ன அளவு சரியா இருக்கு? சொன்னத விட நீ அதிகமா வச்சிருக்க. நீ உருவாக்குற உயிரினத்ததடை தான் பண்ணுவாங்க. ப்ளோன்-னோட உயிரினத்த தான் தேர்ந்தெடுப்பாங்கனு எல்லாரும் சொல்லறாங்க. அங்க பாரு, அவனுக்கு உதவி பண்ண எத்தனப் பேருனு? நானும்…"
"போங்க, போங்க, எல்லா பொண்ணுங்களும் அவனுக்கே உதவி பண்ணுங்க, என்னத்த கிழிக்கிறானு பாக்குறன். இங்க பாரு, இது தான் சரியான அளவு. அங்க இருக்குற உயிரினம் எல்லாம் எவ்வளவு பெருசுனுக் கூட தெரியல. இங்க இருந்து போற இந்த செயற்க்கை உயிரனம் திரும்ப இங்க வருனும்னா இது தான் சரியான அளவு. ஏன் இன்னும் இங்கயே நிக்கிற? போ... அவனுக்கு உன் உதவி தேவ..."
"கோவ படாதடா. நான் போகல. நீ செஞ்சா சரியா தான் இருக்கும். உன் அளவு அறிவு இங்கயாருக்கு இருக்கு?"
"என்ன? கலாய்க்கிரியா?"
"இல்லடா, உண்மையாதான் சொல்றன். உன்னோடு உயிரனத்த தான் தேர்ந்தெடுப்பாங்க.என்னிகிடா இதுக்கு உயிர் குடுக்கபோற?"
"நாளைக்கு"
"நாளைக்கேவா?, ஏன்டா அவசரபடுற?"
"அவசரமில்ல, அது தான் சரியான நேரம். நமக்கு நேரம் ரொம்ப கம்மி. நம்ம உலகம் அழியறதுக்குள்ள இத நாம செய்யனும். அங்க பாரு, இன்னும் 923 நாள் தான் இருக்கு. அதுக்குள்ளநம்ம அந்த உயிரினங்களோட இரத்தம் கொண்டுவந்தா தான், ஆராய்ச்சி ஆரம்பிக்க முடியும்.அவங்களப்பத்தி அப்ப தான் நமக்கு முழுசா தெரியும். பேச்சு வார்த்தை நடத்தலாமா? இல்ல எல்லாரையும் கொள்ளனுமா? சாதாரணமா அங்க போக முடியுமானு? முடிவு எடுக்கமுடியும்.ப்ளோன்-னோட உயிரினம் இந்த வேளைய சரியா செய்யும்னு எனக்கு நம்பிக்க இல்ல.அதுமட்டுமில்ல, அவன் 150 நாள் கழிச்சி தான் உயிர் குடுக்கபோறான்."
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அப்பா, அப்பா சீக்கிரம் இங்க வாங்க, எதோ சொல்லறாங்க, சீக்கிரம் வாங்க அப்பா"
"இரு இரு வரன். என்ன சொல்றாங்க…"
"221 நாட்களில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை உயிரினம் போட்னோ-வை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகத்திற்கு அனுப்புவதாக சாக் ஆராய்ச்சிக்கூடம் தெரிவித்துள்ளது.போட்னோ-வை உருவாக்கிய விஞ்ஞானி ப்ளோன்-க்கு உலக தலைவர் க்ளிங் வாழ்த்துதெரிவித்துள்ளார். அந்த கிரகத்தின் உயிரினங்களை ஆராய்வதற்க்காக பலர் செயற்கை உயிரனங்களைஉருவாக்கியதாகவும், அவ்வற்றில் ப்ளோன் உருவாக்கியுள்ள உயிரினம் சிறப்பாக செயல்படுவதாகவும் சாக் ஆராய்ச்சிக்கூட தலைவர் ஓட்பால் தெரிவித்துள்ளார். இன்னும் இருதினங்களில் மூவாயிரம் போட்னோக்களை புதிய கிரகத்திற்கு அனுப்பபோவதாகவும் தெரிவித்துள்ளார்."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நம் பூமி,
போட்னோக்கள் பூமியை அடைந்துவிட்டது. போட்னோக்கள் பூமியின் முதன்மை உயிரினத்தைக் கண்டுபிடிக்கவேண்டும். புதிதாக உருவாகியுள்ள மனித இனம் தான் முதன்மை உயிரினம். இந்தமொத்த உலகையும் ஆளப்போகும் உயிரினம். அவர்களின் இரத்தம் தான் முதலில் தேவை.போட்னோக்கள் மனிதர்களை கடித்து இரத்தம் உறிஞ்சும் வேலையை தொடங்கிவிட்டன.
முதலில் ஒரு போட்னோ இரத்தம் உறிய ஆரம்பித்தது. வேகமாய், மிக வேகமாய் உறிந்து கொண்டிருந்தது. இது தனிச்சுவை. தன்னை மறந்து போட்னோ இரத்தம் உறிந்துக்கொண்டிருக்கையில், வேகமாக ஒரு மனித கை, ஒரே அடி, போட்னோ இறந்துவிட்டது.
மீண்டும் ஒரு போட்னோ, ஒரு அடி, மரணம்...
போட்னோ, அடி, மரணம்,
போட்னோ, அடி, மரணம்,
போட்னோ, அடி, மரணம்,
.
.
.
மனித இனம் போட்னோக்களை வேட்டையாட ஆரம்பித்தனர், இன்னமும் வேட்டையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். போட்னோக்களும் மனிதப்பலி வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. போட்னோக்களை அழிக்க பல நவின ஆயுதங்களை மனிதர்கள் கையாள துவங்கிவிட்டனர். இருந்தும், ஆயிரம் போட்னோக்கள், லட்சமாக பெருகியது.லட்சம் கோடியானது.
போட்னோக்கள் கோடிக்கணக்கில் உருவாகியும் மனித இன இரத்தத்தை கொண்டு செல்ல முடியவில்லை.
மனிதர்களால் 'கொசு' என்று அழைக்கப்படும் போட்னோக்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது, நிச்சயம் மனித இன இரத்தத்தை தன் கிரகத்திற்கு கொண்டுச்சொல்வோம் என்று.

Comments & reviews · 3
Note: You are not logged in, but you can still leave a comment or review. Before it shows up, a moderator will need to approve your comment (this is only a safeguard against spambots). Leave your email if you would like to be notified when your message is approved.

User avatar
Dreamy
Review
Dreamy wrote a review · Thu Oct 29, 2015 6:58 am

வணக்கம். உங்களை YWS-விற்க்கு அன்புடன் வரவேற்கிறேன்.

நான் இந்த review-வை தமிழிலேயே எழுதி இருப்பேன் அனால் அது எவ்வளவு செரமம் என்பதனை நீங்கள் அறிவிற்கள் என்று நம்பி நான் இதனை ஆங்கிலத்தில் தொடர்கிறேன்.

I’m probably going to echo what Lava said here and there, because we BOTH ARE EXCITED TO SEE A WORK IN TAMIL! AAAAHHHH!

I’m not sure if Tamil literature/industry has had many sci-fic stories in recent times, (apart from of course, நேற்று இன்று நாளை ) I think the genre got buried deep down when writer Sujatha died. He was the man behind many sci-fic and technological movies ever made in Tamil, including Endhiran.

Speaking of Endhiran, was Rangoosky your inspiration in writing this story? If it were, I wouldn’t be surprised. I think he became everyone’s favourite mosquito after the movie release.

You’ve got a very interesting storyline. Usually, when we see aliens speak in Tamil we lose our minds and get all logical about how illogical it is to see ALIENS talk in Tamil (of all languages!). Woah, get it together guys! But here, in your story, it didn’t affect me, at all, and I think the reason behind this was how you never really gave us any description of the dad or the son or the scientists; you went straight into the dialogues, and the good part is, it didn’t feel odd. And, when the dad warns the child that they (the people) might have two eyes; as a reader I could only assume that these creatures might have one eye. Oooh! I also like the fact how the scientists are so very considerate about government’s money.

The only thing that made me think and think and think was the fact how these scientist sent a செயற்கை உயிரினம் (artificial living organism) to the Earth. But, do these artificial organisms resemble the actual aliens? Don’t answer the question though. I like how it is. And, I think it adds to the element of surprise and the unsolved mystery. Basically, I’m fangirling!

Oh, I might have a nitpick, some of the words are clubbed together like this:

கிரகத்தைப் பற்றிசாக் விண்வெளி


Which made it hard for me to read. This story was interesting, smart, and funny! And, I like it! Keep up the good work!

Keep writing! Cheers!

%u0BB5%u0BA3%u0B95%u0BCD%u0B95%u0BAE%u0BCD.

Thank you for replying in Tamil. I was writing my stories in eluthu.com, there I find many sci-fi writers. Rangoosky is not an inspiration, I have imagined these things in my very childhood, now started writing this. And definitely Sujatha's stories are the inspiration. The artificial aliens do not resemble the actual aliens.

I just copy pasted my work from my blog, I have not noticed the words are clubbed, I will correct them. Thank you for your review.

I am happy that, there are few Tamil readers in YWS and reading my stories.

Cheers,
Mathi.

Vanakkam - in Tamil not displayed properly. Sorry.

User avatar
Lava
Review
Lava wrote a review · Thu Oct 29, 2015 3:19 am

Hi mathi!

So, sci fi in Tamil, eh? I was surprised to see it posted, given that there are hardly any Tamil speakers here on YWS. I would love to type out my review in Tamil, but I've never been comfortable typing in Tamil as opposed to writing. So, anyway, onto my comments:

- I like how you decided to go with the whole 'here's the story, now in Tamil'. It seemed like an interesting start, but the initial addition of garbled text gave the impression of swearing? This is a minor nitpick, in any case.

Onto the story:

One of the first things I noticed was that there a couple of spelling errors, but none that can't be rectified upon editing.
I liked your tone modulation between the various speakers/narrators of the story. While, it is odd to see colloquial spoken Tamil written out, given how most written Tamil tends to be in the formal tones. I personally think that this is a nice contrast to the formal language that's widespread and this would definitely be a plus for the Tamil lit industry. On the other hand, i felt like you were playing to the newsreader stereotype of using formal Tamil - while it's interesting to contrast that against regular speech - questions to consider would include : how well does this linguistic distinction carry on to a different organism? And why is it that the scientists don't use the formal language? Just things to consider as you're world-building.

Now, plotwise, I found it interesting, especially the last bit with the mosquito! I think the narrative would greatly benefit from you showing us a little more of what போட்னோ is as a world. You had glimpses of it here and there, and trying to get the reader to better understand the world would definitely help your narrative.

I like the idea of understanding the importance of not wasting funding money on projects, but I would have loved to see you explore more detail on the research. That would make for a more solid plot development and character development with them talking about the issues.

In all, I am excited to see a work in Tamil. This was an interesting story - and I'd like to swee more on here.

Cheers
Lava!

Hi Lava, first of all thank you for the review. Actually, I was about to do in English later.

The first garbled texts are just to tell, this complete story is not in our familiar language [i.e. The languages we speak in earth]. And very sorry for the spelling errors. I will correct them later.

The aliens are actually speaking in their native language, we are reading it in our language [I have written in Tamil]. As this is a short story, I thought no need of much explanation about their world, my mistake. It's not about the money, its restriction from government. Yes, I was not clear in that.

Yes, I will continue the work.

Cheers,
Mathi.

User avatar
Holysocks
Comment

This is really cool. Only problem is... I don't think there's many people on here who can read it. It looks like a very beautiful language though. c:

Thanks. I will translate in English soon.



u can't have villains exist just 2 b villains
— ShadowVyper